சிஐஎஸ்எப்-ல் எஸ்ஐ பணியிடம் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 118 அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் (விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு).
மொத்த இடங்கள்:
118 (ஆண்கள்-87, பெண்கள்- 31).
விளையாட்டு பிரிவுகள் விவரம்:
அதெலடிக்ஸ், பாக்சிங், கூடைப்பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து, மல்யுத்தம், பளு தூக்குதல்.
சம்பளம்:
ஏஎஸ்ஐ பணிக்கு: ரூ.29,200-92,300.
ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு: ரூ.25,500-81,100.
வயது:
ஏஎஸ்ஐ பணிக்கு: 20 முதல் 25க்குள்.
ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு: 18 முதல் 23க்குள்.
கல்வித்தகுதி:
ஏஎஸ்ஐ பணிக்கு- இளநிலை பட்டம்.
ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு- பிளஸ் 2 தேர்ச்சி.
விளையாட்டு தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cisfrectt.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.2.2018.

Comments
Post a Comment