வேலை வேண்டுமா...? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் வேலை

  

tneb

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) இன்று உதவி பொறியாளர் 325 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 28க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 325
பணி: Assistant Engineer (Electrical)  - 300
1. Electrical and Electronics Engineering - 273 
2). Electronics and Communication Engineering / Instrumentation Engineering - 21 
3). Computer Science/ Information Technology Engineering - 6 
பணி: Assistant Engineer (Civil)  - 25
சம்பளம்: மாதம் ரூ.10,100 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100
தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics  Engineering, Electronics and Communication Engineering, Instrumentation
Engineering, Computer Science/ Information Technology Engineering, Civil போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் பிசி, பிசிஒ, பிசிஎம், டிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500 + ஜிஎஸ்டி ரூ.90 என மொத்தம் ரூ.590 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு ரூ.250 + ஜிஎஸ்டி ரூ.45 என மொத்தம் ரூ.295 செலுத்த வேண்டும். இதனை கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் நேரடியாக செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவைஸ வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மின்சார வாரியத்தின் ஆட்சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பின்னர் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

MP High Court-யில் பணி

LED Company திருப்பூர் யில் பணி

மத்திய அரசில் பல்வேறு பணிகள் யுபிஎஸ்சி அறிவிப்பு