வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்: 48,966 மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

  
jobs
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இந்திய ரயில்வே, மெட்ரோ ரயில், மருத்துவமனைகள், முப்படைகள், விமானத்துறை என முக்கியமான மத்திய அரசு துறைகளில் காலியாக பல ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு துறைகள் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு துறைவாரியாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொகுத்து இந்த பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி. விண்ணப்பித்து பயன்பெறவும். மாநில அரசு பணிக்களுக்காக காத்திருக்கும் இளைஞர்கள், தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து முழுமையான ஈடுபாடுகளுடன் முயற்சி செய்தால் வெற்றி நமதே. 

முயற்சிப்போம்... வெற்றிபெறுவோம்...

வாழ்த்துக்கள்...
பாரத ஸ்டேட் வங்கியில் 407 சிறப்பு அதிகாரி வேலை
அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  https://www.sbi.co.in/webfiles/uploads/files/1517232216518_SBI_SCO_ENG.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 27 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு அறிவிப்வை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 19க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTE30012018C4BD15E84BF7477D927549B329231E9B.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள கிளார்க் தரத்திலான 8 ஆயிரத்து 301 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/careers/ongoingrecruitment.html அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1516358303086_SBI_CLERICAL_ADV_ENGLISH.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய ரயில்வேயில் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலை
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து 505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதிகள், தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-012018/detailed-cen-012018.pdf அதிகாரப்பூர்வ லிங்கில் கிளிகில் சென்று தெரிந்து கொள்ளவும். 
பொறியியல் பட்டதாரிகளுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 1896 வேலை
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 1896 எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முமுழுமையான விவரங்கள் அறிய www.delhimetrorail.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 60 கான்ஸ்டபிள் வேலை
இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 60 கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 
பிளஸ்டூ முடித்து. மோட்டார் மெக்கானிக் துறையில் ஐ.டி.ஐ. சான்றிதழுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது ஆட்டோமொபைல் என்ஜினியரிங் துறையில் மூன்றாண்டுகள் டிப்ளமோ முடித்வர்களிடமிருந்து பிப்.7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.itbpolice.nic.in/statics/news என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இஸ்ரோவில் 106 சயின்டிஸ்ட், என்ஜினியர் வேலை
இந்திய விண்ணவெளி ஆராய்ச்சி மையத்தில்(இஸ்ரோ) நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.isro.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
நர்சிங் படித்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் 1126 ஸ்டாப் நர்ஸ் வேலை
உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள 1126 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 4 ஆண்டு பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் வரும் மார்ச் 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி