தடயவியல் அறிவியல் துணை நிறுவன சேவையில் ஆய்வக உதவியாளர்கள் பணி

  
tnpsc
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக தடயவியல் அறிவியல் துணை நிறுவன சேவையில் 56 ஆய்வக உதவியாளர்கள் பணிக்கு நேரடித் தேர்வு மூலம் ஆட்கள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 01/07/2018-ம் தேதி அன்று 18-30 வயதுக்கிடையே இருக்க வேண்டும் எனவும், பள்ளி மேல்நிலைப் படிப்பில் வேதியியல், இயற்பியல், உயிரியல் பிரிவில் பயின்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.100 ஆகும்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 21 கடைசி நாள். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். இந்த பணிக்காக சம்பளம் குறைந்த பட்சம் ரூ.19,500 ஆகவும், அதிகபட்சம் ரூ.62,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்  விவரங்களுக்கு
http://www.tnpsc.gov.in/notifications/2018_02_new_laboratory_assistant.pdf என்ற இணையதள முகவரியில் காணலாம்

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி