பார்மசிஸ்ட் முடித்தவர்களா நீங்கள்... உங்களுக்கு தமிழ்நாடு மருத்துவத் துறையில் பார்மசிஸ்ட் வேலை

tngov
தமிழ்நாடு மருத்துவத் துறையின் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 229
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Pharmacist (Siddha) - 148
பணி: Pharmacist (Ayurveda) - 38
பணி: Pharmacist (Unani) - 20
பணி: Pharmacist (Homoeopathy) - 23
தகுதி: சம்மந்தப்பட்ட ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 + 34,800 + தர ஊதியம் ரூ.4,200
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2018
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2018/01_MRB_Pharmacist_Siddha_Notification_13022018.pdf, http://www.mrb.tn.gov.in/pdf/2018/04_MRB_Pharmacist_Unani_Notification_130202018.pdf, http://www.mrb.tn.gov.in/pdf/2018/03_MRB_Pharmacist_Homoeopathy_Notification_13022018.pdf, http://www.mrb.tn.gov.in/pdf/2018/02_MRB_Pharmacist_Ayurveda_Notification_13022018.pdf போன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

LED Company திருப்பூர் யில் பணி

North Central Railway-யில் Sports Quota பணி

MP High Court-யில் பணி